துண்டு சீட்டில் மனு அளித்தாலும் நிறைவேற்றும் முதல்வர்: பாமக எம்எல்ஏ புகழாரம்

துண்டு சீட்டில் மனு அளித்தாலும் நிறைவேற்றும் முதல்வர்: பாமக எம்எல்ஏ புகழாரம்
X

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும் பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள்.

சேலத்தில் நடந்த விழாவில் துண்டு சீட்டில் மனு அளித்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவதாக பாமக எம்எல்ஏ அருள் பேசினார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் பேசும் போது, மாற்றான் தோட்டது மல்லிகைக்கும் மனம் இருக்கும் என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்த ஆட்சியில் துண்டு சீட்டில் மனு அளித்தாலும், அதனை நிறைவேற்றும் நிலை உள்ளது. சேலத்தில் கடந்த மாதம் அமைச்சரிடம் துண்டு சீட்டில் கொடுத்த மனுவிற்கு விடை முதியோர் உதவி தொகை கிடைத்து உள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து விழாவில் மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் பேசும்போது, கடந்த காலங்களில் உள்ள முதல்வர்களை விட மிக எளிமையான முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை மிக சிறப்பாக நிறைவேற்றி சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று உள்ளதாகவும், அனைத்து தொகுதிக்கும், எந்த கட்சிக்கும் பாகுபாடின்றியும் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று புகழாரம் சூட்டினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!