சேலத்தில் பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு

சேலத்தில் பெண்ணிடம் செயின் பறித்த மர்ம நபர்கள்: சிசிடிவி காட்சி வெளியீடு
X
செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள். 
சேலத்தில், பெண்ணிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜமுனாராணி. இவரது கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், வாழ்வாதாரம் இழந்து தவித்த வந்த ஜமுனாராணி, இட்லி அரிசி மாவு பேக் செய்து அப்பகுதியில் விற்பனை செய்து வரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சேலம் நெத்திமேடு அருகே அரிசி ஆலை ஒன்றில் அரிசியை வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சாமிநாதபுரம் மெயின் ரோடு ஈபி அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களில் இருவரில் பின்புறம் அமர்ந்திருந்த ஒருவர், ஜமுனாராணி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

இதுகுறித்து ஜமுனாராணி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெண்ணின் கழுத்தில் இருக்கும் தங்க சங்கிலியை பறித்து செல்வதும், நிலைதடுமாறி பெண் கீழே விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் உள்ள இளைஞர்கள் யார் என்பது குறித்து பள்ளப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!