நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம்: கள் இயக்கம் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம்: கள் இயக்கம் குற்றச்சாட்டு
X

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி.

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய, அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் தர வேண்டியுள்ளதாக, தமிழ்நாடு கள் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, சேலத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் போதிய மழை பொழிவால், நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால், அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் முழுமையாக கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது. தனியாரிடம் நெல் விற்பனை செய்தால், அரசின் விலையில் பாதிதான் கிடைக்கிறது.

அதுமட்டுமல்ல, நெல் உற்பத்தி அதிரித்துள்ளதால் விவசாயிகள் தங்ளின் நெல்லை கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிக லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது. இப்பிரச்சனைகளுக்கு அரசு தீர்வு காணவேண்டும் என்றால், அரிசி ஏற்றுமதி செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு சிதைந்துள்ளது. உள்ளாட்சி அமைப்பிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் மீண்டும் வழங்கி, அனைத்து உள்ளாட்சி பொறுப்புகளுக்கும் சுயேட்சை சின்னத்தை கொண்டுதான் தேர்தல் நடத்த வேண்டும்.

மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் சுத்தமான ஜவ்வரிசி வெளிர் மஞ்சள் நிரம் கொண்டது. ஆனால் பெரும்பாலான ஆலைகள், ஜவ்வரிசியை வெண்மையாக்க அதில் ரசாயனங்களை கலக்கின்றனர். இது உடலுக்கு கேடு ஏற்படுத்துவதால் இந்தியா முழுவதும் ஜவ்வரிசி நுகர்வு என்பது வெகுவாக குறைந்துவிட்டது. இதனை தடுக்காவிட்டால், மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil