/* */

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நண்பர் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சேலத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணியின் நெருங்கிய நண்பரின் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் நண்பர் மகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
X

முன்னாள் அமைச்சர் தங்கமணி நண்பரின் மகன் தங்கியுள்ள வீடு.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை வருமானத்தை விட 4.85 கோடி கூடுதலாக சொத்து சேர்த்துள்ளதாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 15 ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கமணியின் பூர்வீக வீடு உள்பட 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக அன்று, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரனின் வீடு மற்றும் ரெட்டிப்பட்டியில் உள்ள தங்கமணியின் நெருங்கிய நண்பரும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரருமான குழந்தைவேலுவின் நட்சத்திர ஹோட்டல், குரங்குசாவடி பகுதியில் உள்ள அவரின் வீடு உள்பட 4 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று தங்கமணிக்கு தொடர்புடைய சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 14 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலத்தில் தங்கமணியின் நண்பரும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரமான குழந்தைவேலு என்பவரின் மகன் மணிகண்டன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சேலம் திருவாகவுண்டனூர் பகுதியில் உள்ள ஏவிஆர் ஸ்ரீ கோகுலம் அப்பார்ட்மன்டில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 20 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    ஸ்ரீவரத ஆஞ்சநேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.55 ஆயிரம்
  3. நாமக்கல்
    தொழிலாளர் நல வாரிய இணையதளம் முடக்கம்: சீரமைக்காவிட்டால் போராட்டம்...
  4. ஈரோடு
    போலீஸ் - பேருந்து நடத்துனர் மோதல் எதிரொலி: ஈரோட்டில் பேருந்துகளுக்கு...
  5. திருவண்ணாமலை
    மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: விஐடி வேந்தா்
  6. திருவண்ணாமலை
    முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்லூரியில் சேர சான்றிதழ் பெற...
  7. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  8. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  10. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி