சேலத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் கைது

சேலத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் கைது
X

கோப்பு படம்

சேலத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கலையரசி என்பவர், சீலநாயக்கன்பட்டியில் ஆண்கள் சலூன் கடையில், பெண்களை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுவதாக, அன்னதானப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் வந்தது. கடந்த 13.9.2020 ஆம் தேதி அன்று சம்பவ இடத்திற்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வழக்கு பதிவு செய்து கலையரசி என்பவரை கைது செய்து அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்தனர்.

கடந்த 13.8.2021 ஆம் தேதியன்று, குகை பகுதியை சேர்ந்த பிரியாணி மணி என்கின்ற மணிகண்டன், புலிகுத்தி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது, செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மணிகண்டனை கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் இருவரையும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கலையரசி மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் பிரியாணி மணி என்கின்ற மணிகண்டன் ஆகிய இருவரையும் இரண்டாவது முறையாக அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் மற்றும் செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மோகன்ராஜ் பரிந்துரையைப்படி, மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, இருவரையும் இரண்டாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதேபோல், சேலம் ஜலால் புறா பகுதியை சேர்ந்த சுகேல் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கூட்டாளியுடன் சேர்ந்து பட்டை கோவில் அருகே, ஆட்டோ டிரைவர் ஒருவரை அச்சுறுத்தி பணம் கேட்ட குற்றத்திற்காக, சேலம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையில் வெளியே வந்த அவர், 9.9.2021 ஆம் தேதி அன்று மீண்டும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜலால் புறா பகுதியை சேர்ந்த ஜாபர் என்பவருடனும் அவரது மனைவியிடமும் தகராறு செய்து காயம் ஏற்படுத்தி அவர் வைத்திருந்த பணத்தை பறித்து, பொது இடத்தில் ஒழுங்கு மற்றும் அமைதி பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்டுள்ளார்.

அதன் பேரில், நகர காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுகேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சுகேல் என்பவர் கடந்த 2015 மற்றும் 2017ஆம் ஆண்டில் தொடர் குற்றத்தில் ஈடுபட்டபோது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!