சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி வேட்பாளராக காங்கிரஸ் சாரதா தேவி அறிவிப்பு

சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி வேட்பாளராக காங்கிரஸ் சாரதா தேவி அறிவிப்பு
X

சேலம் மாநகராட்சி துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சாரதா தேவி மத்திய மாவட்ட திமுக செயலாளரை சந்தித்தார்.

சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாரதா தேவி அறிவிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவி காங்கிரஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து, துணை மேயராக காங்கிரஸ் கட்சியால் சேலம் மாநகராட்சி ஏழாவது கோட்டம் மாமன்ற உறுப்பினர் சாரதாதேவி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மேயர் வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!