சேலத்தில் காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்த 3 பேர் கைது

சேலத்தில் காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்த 3 பேர் கைது
X

சேலம் கருப்பூர் அருகே போலீசாரின் வாகனச் சோதனையில், காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் வழியாக, கர்நாடகாவில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு, காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக ஒரு மாத காலமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மதுபானங்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதையடுத்து, காவல்துறை தீவிர வாகன தணிக்கை ஈடுபட்டுள்ளனர்.

அவ்வகையில், சேலம் கருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில், காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து, திண்டுக்கல் மாவட்டத்திற்கு காய்கறி ஏற்றி வந்த மினி லாரியை சோதனை செய்தனர். அப்போது காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். ஒரு லட்சம் மதிப்பிலான 1641 மதுபாட்டில்கள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேஷ், சந்தோஷ்குமார், முனிராஜ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் என்பவர் கர்நாடகாவில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து கொடுத்தால், பணம் கொடுப்பதாக கூறியதால் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள ராகேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil