ஓமலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற நான்கு பேருக்கு 1லட்சம் அபராதம் - வனத்துறை நடவடிக்கை
டேனிஸ்பேட்டை வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த துப்பாக்கி பறிமுதல்.
சேலம் மாவட்டம், டேனிஸ்பேட்டை பகுதியில் சேர்வராயன் மலைத்தொடரில் மான், பன்றி, முயல், அறிய வகை சருகு மான் உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி மான், பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து வனத்துறை அதிகாரி டேனிஷ்பேட்டை வனச்சரகர் பரசுராமமூர்த்தி தலைமையில் வனப்பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது சேலம் பகுதியை சேர்ந்த, சரவணன், இளங்கோ, ரமேஷ், சதீஷ்குமார் ஆகியோர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர். அப்பொழுது அவர்களை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் விலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தில் வந்ததை அடுத்து நான்கு பேரையும் கைது செய்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இதைதொடர்ந்து அவர் மீதும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தலா 25ஆயிரம் ரூபாய் வீதம் 1லட்சம் ரூபாயை இணைக்கட்டணமாக வசூலித்தனர். பின்னர் அவர்களிடம் வனவிலங்குகளை வேட்டையாடுவது குற்றம், இனிமேல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu