முட்புதரில் வீசப்பட்ட பெண் சடலம்: கணவரிடம் போலீசார் விசாரணை

முட்புதரில்  வீசப்பட்ட பெண் சடலம்: கணவரிடம் போலீசார் விசாரணை
X

கொலை செய்யப்பட்ட பெரியக்காள்

முட் புதரில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்சடலம் கிடந்ததை கண்ட மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே சூரப்பள்ளி பழக்கனூர் பகுதியில் வசிக்கும் தம்பத்தினர் ராஜேந்திரன் பெரியக்காள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேந்திரன் அதே பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் நார் உரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி பெரியக்காளும் அதே தேங்காய் மண்டியில் வேலைபார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரியாக்களும் அதே மண்டியில் வேலைபார்த்து வந்த டிரைவர் சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது தொடர்பாக கணவர் ராஜேந்திரன் பெரியக்காளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை பெரியக்காள் அருகில் உள்ள கடைக்கு பால் வாங்கிவருவதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாக வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் குடும்பத்தினர் தேடிய நிலையில் அப்பகுதியில் முள் புதரில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்சடலம் கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் ஜலகண்டபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, கணவர் ராஜேந்திரனை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!