கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும்

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும்
X
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து, காவிரி ஆற்றில் கர்நாடகா கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீரை திறந்து விட்டது. இரு தினங்களுக்கு முன் திறந்துவிடப்பட்ட காவிரி நீர், இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது.

கடந்த சில தினங்களாக காவிரிய்நீர்வரத்து 1500 கன அடிகளாக இருந்தது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் வந்துள்ளதால் தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் அதிகரித்துள்ள நீர் நாளை மேட்டூர் அணையை சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 90.68,௮டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்