சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை
X
தலைவாசல் அருகே சட்டவிரோதமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர் கைது. 2250 மது பாட்டில்கள் பறிமுதல்

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கடந்த 10ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளதை அடுத்து அரசு டாஸ்மாக் கடைகள் 10ந்தேதி முதல் 24ம் தேதி வரை செயல்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, தலைவாசல்,வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்யும் நபர்கள், கடந்த பத்தாம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பெட்டி பெட்டியாக வாங்கி சென்று பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிக்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆத்தூர் DSP தனிப் படையினர் உதவி ஆய்வாளர்கள் கோபால் மற்றும் மூர்த்தி ஆகியோரின் தலைமையில் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அப்போது தலைவாசல் அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சிவலிங்கம்(45) என்பவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த 2250 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து சிவலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்