சேலம் மாவட்டத்தில் 1,350 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

சேலம் மாவட்டத்தில் 1,350 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
X

சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள நபர்கள், அதனை போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தபின் அந்த துப்பாக்கிகளை போலீசார் திரும்ப வழங்குவார்கள். இதன் பேரில் சேலம் மாவட்டத்தில் மொத்தமாக துப்பாக்கி வைத்துள்ள 1,412 பேருக்கு அதனை அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க எஸ்பி தீபாகனிகர் உத்தரவிட்டார். இதில் 60 பேர் வங்கி பணியில் ஈடுபடும் நபர்கள் என்பதால், தொடர்ந்து துப்பாக்கிகளை வைத்துக் கொள்ள விலக்கு அளிக்கப்பட்டது.

வங்கிகளில் இருந்து ஏடிஎம் மையங்கள் மற்றும் இதர வங்கிகளுக்கு பணத்தை எடுத்துச் செல்லும் முக்கிய பணியில் ஈடுபடும் நபர்கள் என்பதால் தேர்தல் ஆணைய உத்தரவுபடி இவ்விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள நபர்களிடம் தொடர்ந்து துப்பாக்கிகளை போலீசார் பெற்றனர். மாவட்டம் முழுவதும் நேற்று வரை 1,350 பேர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைத்தனர். அதனை பாதுகாப்பாக போலீசார் வைத்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் முடிந்தபின் உரிய கடிதத்தை கொடுத்து அந்த துப்பாக்கிளை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!