போலி பணிநியமன ஆணை மோசடி: நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

போலி பணிநியமன ஆணை மோசடி: நடவடிக்கை கோரி ஆட்சியர் அலுவலகத்தில்  புகார்
X

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க போலி பணி நியமன ஆணை மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 9 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஜங்கம சமுத்திரம் பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் பாதிக்கப்பட்ட மூன்று பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலைை வாங்கித் தருவதாக கூறி போலி பணி ஆணையை வழங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

அந்த புகாரில், சேலம் சீலநாயக்கன்பட்டி சேர்ந்த தங்கமணி மற்றும் அவரது அண்ணன் காளிமுத்து ஆதி இரண்டு பேரும், நீதிமன்றத்தில் தட்டச்சர் பணிக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தலா ரூ. 3,20,000 வீதம் 3 பேரிடம் மொத்தம் ரூ.9,60,000 வாங்கியுள்ளார்.

இதையடுத்து நீதிமன்ற பணி நியமன ஆணையை எங்களுக்கு அளித்தார். இதனையடுத்து பணிநியமன ஆணையை எடுத்துக்கொண்டு ஆத்தூர் நீதிமன்ற வளாகத்துக்கு சென்று கேட்டபோது, இந்த பணி நியமன ஆணை நீதிமன்ற சார்பில் வழங்கவில்லை. இது நீதிமன்ற முத்திரை மற்றும் நீதிபதி கையெழுத்து இல்லை என்றும் தெரிவித்தனர். இந்த ஆணை போலியானது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது முன்னுக்கு பின்னாக தெரிவித்தார். பணத்தை திருப்பி கேட்டதற்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டார். இதுகுறித்து கடந்த 2019ம் ஆண்டு மாவட்ட குற்றவியல் காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை எங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் பணமும் மீட்டுத் தரவில்லை. மூன்றாண்டுகளாக வேலை இல்லாமலும் பணம் கிடைக்காததால் எங்கள் குடும்பம் மிகவும் அவதியுற்று வருகிறது. எனவே போலி ஆவணம் தயாரித்து ஏமாற்றிய இரண்டு நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!