தேர்தலையொட்டி துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பு
தமிழக தேர்தலையொட்டி சேலத்தில் துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைப்பது வழக்கம். தற்போது சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வழக்கம் போல் தங்களது எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆத்தூர் சப்டிவிஷனில் 241 பேருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று வரை ஆத்தூர் டவுன் 56, ஆத்தூர் ஊரகம் 49, தலைவாசல் 28, வீரகனூர் 15, கெங்கவல்லி 12, தம்மம்பட்டி 24, மல்லியக்கரை 39 என, 223 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் வாழப்பாடி சப்டிவிஷனில் 161 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 141 துப்பாக்கிகள், மேட்டூர் சப் டிவிஷனில் 125 பேருக்கு உரிமம் உள்ள நிலையில் , 119 பேர் ஒப்படைத்துள்ளனர் தலைவாசலில் 28, வீரகனூரில் 15 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1421 துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1119 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வங்கி பயன்பாடு மற்றும் விளையாட்டு பயிற்சிக்காக மாவட்டத்தில் 42 துப்பாக்கிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல சேலம் மாநகரில் 556 பேருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இதில் 477 பேர் தங்களது துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.
வங்கி மற்றும் விளையாட்டு வீரர் பயன்பாட்டிற்க்காக 79 துப்பாக்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் உடனே போலீஸ் ஸ்டேஷனில் சமர்ப்பிக்க வேண்டும் என போலீசார் அறிவுறுதியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu