ஆதிவாசி வேடத்தில் வாக்கு சேகரிப்பு : ஐஜேகே வேட்பாளர் நூதனம்
இந்திய ஜனநாயக கட்சியின் கெங்கவள்ளி சட்டமன்ற தனி தொகுதி வேட்பாளராக பெரியசாமி போட்டியிடுகிறார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக நடந்தே சென்று ஆதரவு திரட்டி வருகிறார் இதனடிப்படையில் இன்று வாக்காளர்களை கவரும் வகையில் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று உடல் முழுவதும் வேப்பிலை அணிந்தபடி ஆதிவாசி வேடம் அணிந்து நடந்தே சென்று வாக்காளர்களை சந்தித்தார். இந்திய ஜனநாயக கட்சியின் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர் உடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இதனடிப்படையில் இன்று தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆதிவாசி வேடம் அணிந்து சென்ற இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். வேட்பாளருடன் கட்சியின் நிர்வாகிகள் கும்மியடித்து உற்சாகப்படுத்தினர்.
தொடர்ந்து சலூன் கடைக்கு சென்ற வேட்பாளர் சலூன் கடையில் முகம் சவரம் செய்தல் முடி வெட்டியும் வாக்கு சேகரித்தார்.இதேபோல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று வேட்பாளர் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu