எடப்பாடி நகராட்சியில் தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வழங்கல்

சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் பொதுமக்களுக்கு தினந்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீர் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று தீவிரமாக பரவுவதை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில், சேலம் மாவ்டடம் எடப்பாடி நகராட்சிக்குப்பட்ட 30 வார்டு பகுதிகளில் நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எடப்பாடி நகராட்சி ஆணையாளர் பழனியப்பன் உத்தரவின்படி, நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை இளைஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் இணைந்து, தினம்தோறும் 800 லிட்டர் கபசுர குடிநீரை பொது மக்களுக்கு வீடுவீடாக சென்று வழங்கி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்தின் இந்த ஏற்பாட்டினை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil