/* */

எடப்பாடியில் 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இதுவரை 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்தும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

எடப்பாடியில் 700-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு
X

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு நடைமுறையை கடுமையாக்க உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சுற்றி வருகின்றனர்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் எடப்பாடி காவல் ஆய்வாளர் உட்ரோ வில்சன் உத்தரவின்படி எடப்பாடி பஸ் நிலையம் அருகே பேரிகார்டு அமைத்து உதவி காவல் ஆய்வாளர்கள் பெரிய தம்பி, பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி அந்த வழியாக வரும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 700க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்தும் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று ஒரேநாளில் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இனி காவல்துறையின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என எடப்பாடி உதவி காவல் ஆய்வாளர் பெரியதம்பி தெரிவித்துள்ளார்.

Updated On: 20 May 2021 10:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?