எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் தற்காப்பு, விழிப்புணர்வு ஒத்திகை
சேலம் பூலாம்பட்டி காவிரி ஆற்றங்கரையில் எடப்பாடி தீயணைப்பு வீரர்கள் பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் பேரிடர் காலங்களில் தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலங்களில் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாகும் சேலம் மாவட்டம் எடப்பாடி தீயணைப்புத்துறை வீரர்கள்,பூலாம்பட்டி காவிரி ஆற்றில் தென்மேற்கு பருவமழை பேரிடர் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தண்ணீரில் சிக்கித்தவிப்பவர்களை பொதுமக்களே தங்களது வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் டியூப் மற்றும் வாட்டர் கேன் போன்ற உபகரணங்களை வைத்து தங்களை தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்புத்துறை வீரர்கள் செய்முறை விளக்கமளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu