கொரோனாவை கட்டுப்படுத்திடலாம் - ஊர் சுற்றிகளை முடியலை : திணறும் நிர்வாகம்

கொரோனாவை கட்டுப்படுத்திடலாம் - ஊர் சுற்றிகளை முடியலை : திணறும் நிர்வாகம்
X

தேவை இல்லாமல் ஊர் சுற்றுகிறார்களா என்று விசாரிக்கும் அதிகாரிகள்.

எடப்பாடியில் ஊரடங்கு மீறல்-

எடப்பாடியில் ஊரடங்கு மீறி வெளியில் சுற்றும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் நகராட்சியினர்.திணறி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை நடைமுறை படுத்தி உள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் சிறிதும் அச்சமின்றி வெளியில் சுற்றுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஊரடங்கு மீறி கட்டுப்பாடின்றி வெளியில் சுற்றி வருகின்றனர். இதனால் எடப்பாடி நகராட்சியினர் பஸ் நிலையம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தனிநபர் இடைவெளியை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் முக கவசம் அணியாமல் வலம் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகன நெரிசல் ஏற்படுத்தும் அளவிற்கு வெளியில் சுற்றுவதால் என்ன செய்வதென்றே தெரியாமல் நகராட்சியினர் உள்ளனர்.

இவ்வாறு வெளியில் சுற்றுபவர்களை தடுத்து நிறுத்தி வாகனம் பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்பதே தன்னார்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!