சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில்  இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா
X

சேலம் அரசு மருத்துவமனை (பைல் படம்)

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதிதாக 398 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி ஆகியுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 94 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் 174 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 52 பேருக்கும், ஆத்தூர், மேட்டூர் நகராட்சியில் 13 பேருக்கும்,

வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 65 பேர் என மொத்தம் 398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று சேலம் மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!