சேலம் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில், நாளை 1392 மையங்களில் கொரோனா தடுப்பூசி பெரு முகாம் நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில், பல்வேறு மையங்களில், பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் தற்போதுள்ள 1,11,020 டோஸ்கள் கையிருப்பின் அடிப்படையில், நாளை ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, அனைத்து வாக்குச் சாவடி மையங்கள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, மொத்தம் 1392 மையங்களில் பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட உள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!