சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் 50 ஆக அதிகரிப்பு - 3,500 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

சேலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகள் 50 ஆக அதிகரிப்பு - 3,500 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
X
சேலத்தில், கொரோனாவால் தடை செய்யப்பட்ட பகுதிகள் 50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது; அத்துடன், 3,500 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொற்று பரவாமல் இருக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சேலம் மாநகரில் மூன்று பேருக்கு மேல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட அஸ்தம்பட்டி மண்டலம் அழகாபுரம், கணக்குப் பிள்ளை தெரு, பார்வதி தெரு, குமரன் நகர், காட்டூர், மாடன் பில்டர்ஸ், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்டி பால் தெரு , ரெட்டிபட்டி, அம்பேத்கர் நகர் பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ஜி ஆர் நகர், கோவிந்தம்மாள் நகர், நரசிங்கபுரம் தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், அம்மாபேட்டை மண்டலத்தில் செல்வா நகர், கே எம் காலனி, பழனிமுத்து தெரு, கிச்சிப்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் 50 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநகரில் மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முதியவர்கள் குழந்தைகள் தேவையில்லாமல் வெளியில் வருவதை தடுக்க வேண்டும் வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!