குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தம்பதி தற்கொலை
X

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொத்து பிரச்சனை காரணமாக தங்களது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தம்பதியும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன் வேல்முருகன். இவர் நெல் அறுவடை இயந்திர ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சத்தியா என்கிற மனைவியும், அபினயா (12) என்கிற மகளும், சங்கீத் ( 11 ) என்கிற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வேல்முருகனின் தந்தைக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே வேல்முருகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனைவி சத்தியாவிற்கும், மாமியார் தனலட்சுமிக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் சத்தியாவிற்கும், மாமியார் தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது தனலட்சுமிக்கு ஆதரவாக கணவரின் தம்பி மனைவி ராஜாமணியும் சேர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளால் பேசி சண்டை போட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சத்தியா நேற்று மாலை வீட்டிற்கு வந்த கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த வேல்முருகனும் தங்களுக்கு ஆதரவாக யாரும் இல்லையென்று தங்களது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு மஞ்சினி அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று இரவு 9 மணி அளவில் கணவன்,மனைவி இருவரும் விஷம் குடித்து விட்டு தங்களது குழந்தைகள் இருவருக்கும் விஷத்தை வாயில் ஊற்றி உள்ளனர். அதிகமாக விஷம் குடித்த மனைவி சம்பவ இடத்திலேயே நள்ளிரவு இறந்துள்ளனர். விஷம் குடித்த குழந்தைகள் போன் மூலம் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் ஆத்தூர் ஊரக போலீசார், வேல்முருகனை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவரும் உயிரிழந்தார். மேலும் அபிநயா என்ற பெண்குழந்தை ஆத்தூர் அரசு மருத்துவமனையிலும் சங்கீத், தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சொத்து பிரச்சனை தொடர்பாக இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தம்பதியும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!