சைனிக் பள்ளி சேர்க்கை - நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கடைசிநாள் 15.12.2023

சைனிக் பள்ளி சேர்க்கை - நுழைவுத் தேர்வு:  விண்ணப்பிக்க கடைசிநாள் 15.12.2023
X

பைல் படம்

சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக் கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் (Sainik schools) அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு,https://aissee.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக டிச.16-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும்.

கட்டண விவரம்:இதற்கு விண்ணப்ப கட்டண மாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.650-ம் இணையவழியில் செலுத்த வேண்டும்.இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை என்டிஏ வலைதளத்தில்www.nta.ac.in சென்று அறிந்து கொள்ளலாம்.மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின்aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சொசைட்டி என்ற இந்திய அரசு அமைப்பு மூலம் அமைக்கபட்டது. இது அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.வி.கிருஷ்ண மேனன் அவர்களால் 1961 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. இந்தியாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும் மாணவர்களை இந்திய இராணுவத்தில் சேரத் தயார்படுத்துவை முக்கிய நோக்கமாகக் இந்தப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் 33 பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளது. இந்தப் பள்ளிகளில் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

பள்ளியின் நோக்கம் சிறுவர்களை கல்வி, உடல் மற்றும் உளவியல் ரீதியாக தேசிய பாதுகாப்பு அகாதமி ( NDA - National Defence Academy) அல்லது பிற துறைகளில் நுழைவதற்கு தயார்படுத்துவதாகும்.

அமராவதி சைனிக் பள்ளி என்பது இந்தியாவிலுள்ள 33 சைனிக் பள்ளிகளில் ஒன்று ஆகும். இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணைக்கு அருகே உள்ளது. இந்தப் பள்ளியானது இந்திய மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து உண்டு உறைவிடப் (Boarding school) பள்ளியாகும். இது நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) பாடத் திட்டத்தின்படி இயங்கும் ஆங்கிலவழிப் பள்ளியாக இருந்தாலும் தமிழ், இந்தி, ஆங்கிலம் என்ற மும்மொழி திட்டம் பின்பற்றப்படுகிறது. இங்கு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்படுகிறது.

இங்குப் பாடத்துடன் குதிரை ஏற்றம், நீச்சல், துப்பாக்கிச் சுடுதல், மலையேற்றம், விமானம், கப்பல் அமைப்புகள் குறித்துக் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். பள்ளியில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்து வரலாம் என்று விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 2018 ஆண்டு காலகட்டத்தில் அமராவதி சைனிக் பள்ளியில் 600 மாணவர்கள் பயில்கின்றனர்.

அமராவதி நகர் சைனிக் பள்ளி, சமுதாயத்தின் ஒரு பகுதியாக 16 ஜூலை 1962 இல் தொடங்கப்பட்டது. இது 1975 வரை சைனிக் பள்ளி, மெட்ராஸ் (எஸ்.எஸ்.எம்) என அழைக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு அகாதமியில் சேர மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சைனிக் பள்ளி, உருவாக்கப்பட்டது. என்.டி.ஏ (என்.டி.ஏ இந்தியாவில் உள்ள மூன்று படைகளிலும் நுழையும் மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி அளிக்கிறது ). இந்திய கடற்படை அகாதமி (ஐ.என்.ஏ) இந்திய கடற்படைக்குள் நுழையும் கடற்படை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு (அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு- AISSEE) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பொதுப் பள்ளி கல்வி வழங்கப்படுகிறது. தலைமைத்துவ திறன் கொண்ட மாணவர்கள் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் அதிகாரிகளாக ஆக பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இந்திய குடிமக்கள் மட்டுமே பள்ளிக்குள் நுழைய தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!