ஆற்காட்டில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் தொடக்கம்
12-வது தேசிய சிலம்ப போட்டியை இந்திய சிலம்ப கூட்டமைப்பின் தலைவர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் பள்ளியில் 12-வது தேசிய சிலம்ப போட்டி துவங்கியது. போட்டியை இந்திய சிலம்ப கூட்டமைப்பின் தலைவர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார். 4 நாட்கள் நடக்கும் போட்டியில் இந்தியாவில் 22 மாநிலங்களை சேர்ந்த 400 மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
போட்டியானது ,சீனியர், சூப்பர் சீனியர், ஜூனியர், சூப்பர் ஜூனியர் என 4 பிரிவுகளாக நடக்கிறது .போட்டியில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளது. போட்டியை துவக்கி வைத்த தேசிய சிலம்பாட்ட கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சிலம்பாட்ட கலைக்கு மத்திய மாநில அரசுகள் உரிய முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், சிலம்பாட்ட வீரர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு செய்துள்ளதற்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.
பின்னர் அவர், மத்திய அரசின் கேல்வித்யா பிரிவில் சிலம்பப் போட்டியை இணைத்ததால் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மத்திய அரசு அத்திட்டத்தில் இணைத்ததால் ஆண்டு தோறும் 50 சிலம்பு போட்டி வீரர்களுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்து வருகிறது. ஆறு ஆண்டுகள் தொடர்ந்து போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மத்திய அரசின் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்தில் சிலம்பு போட்டியை சேர்ப்பதற்கு சிலம்பு கூட்டமைப்பு முயற்சி எடுத்து வருவதாக தமிழக அரசு இதற்கு முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிலம்பப் போட்டியை, தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா உலக நாடுகள் அளவில் பிரபலப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu