ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர்

ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர்

திமிரி ஒன்றிய அதிமுக  வேட்பாளர் விநாயகம்

ஆற்காடு அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளரிடம் 1.44லட்சம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்க உள்ளது . அதில், வாலாஜா, ஆற்காடு, திமிரி ஆகிய ஒன்றியங்களில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ளது .

தேர்தல் பிரச்சாம் நிறைவு பெற்ற நிலையில் திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட பழையனூர் ஆலமரம் பேருந்து நிலையம் அருகே, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருப்பதாக தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரி பஞ்சாட்சரம் தலைமையிலான பறக்கும் படையினர் அங்கு சென்றனர்.

அப்போது, திமிரி ஊராட்சி ஒன்றியக்குழு 6 வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக., வேட்பாளர் விநாயகம் (50) என்பவர் சிலருடன் சேர்ந்து ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது கையும்களவுமாக பறக்கும் படையினரிடம் சிக்கினார. அவரிடமிருந்து ரூ.1.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை திமிரி ஒன்றிய தேர்தல் அலுவலர் வெங்கடாசலம் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

பின்னர், இது குறித்து பறக்கும்படை அதிகாரி பஞ்சாட்சரம் திமிரி போலீஸில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இச்சம்பவம் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Tags

Next Story