அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்
X
பைல் படம்
தங்கத்தை கொண்டு வந்த பயணியிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதால், சுங்கவரி துறையினரிடம் ஒப்படைக்க ரயில்வே காவல்துறை முடிவு

தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் விரைவு ரயில் இன்று காலை அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரயில் பெட்டிகளில் அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் வைத்திருந்த பையில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் இருந்ததை கண்டு ரயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், அந்த நபரை அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறக்கி, ரயில்வே காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது அவர் கொண்டு வந்த பணம் மற்றும் நகைக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும், இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் பெயர் நாகராஜ் என்றும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் தங்கம் வாங்கி வந்து கோவையில் தங்க வியாபாரம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்த அவரிடம் இருந்து பறிமுதல் செய்த நகை மற்றும் பணத்தை ரயில்வே போலீசார் சுங்கவரி துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself