/* */

இராமநாதபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 590 பேர் மீது வழக்குப்பதிவு

இராமநாதபுரத்தில் ஜூன் மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 590 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய 590 பேர் மீது வழக்குப்பதிவு
X

இராமநாதபுரத்தில் ஜூன் மாதத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 590 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் காவல் உட்கோட்ட பகுதியில் கடந்த ஜூன் மாதம் அந்தந்த பகுதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதில், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 40 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 363 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 87 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி சென்றதாக 9 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 8 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 83 பேர் மீதும் என மொத்தம் 590 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.83 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கொரோனா பரவிவரும் நிலையில் அரசின் உத்தரவினை மதிக்காமல் முக கவசம் அணியாமல் சாலைகளில் சென்றதாக 38 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த ஒரு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 15 July 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது