மதுரையில் இருந்து கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம்
ராமேஸ்வரம் வந்தடைந்த மாணவர்களின் சைக்கிள் பேரணி
மதுரை தனியார் வல்லபா வித்யாலயா சிபிஎஸ்சி மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு மாணவர்கள் 19 பேரும் மாணவியர் 6 பேரும், 8 ஆசிரியர்களுடன் 'இணையத்தில் இருந்து இயற்கைக்கு' என்ற தலைப்பில் சைக்கிள் பயணத்தில் நேற்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டனர்.
மானாமதுரை இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் அடுத்த அப்துல் கலாம் நினைவகம் வரை மாணவ மாணவிகள் சைக்கிளில் 36 மணி நேரம் சைக்கிள் பயணம் செய்தனர். இந்தப் பயணத்தின் நோக்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இணையவழிக் கல்வி மூலமாக வீட்டில் இருந்தே பயின்று வந்த மாணவர்களை, இயற்கை சூழலுக்கு மாற்றி அவர்களது மனதையும் உடலையும் புத்துணர்ச்சி அடையச் செய்வதே நோக்கமாகும் என்று தெரிவித்தனர். அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் இதுபோல இயற்கை சம்பந்தப்பட்ட விளையாட்டு உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி உடலையும் மனதையும் புத்துணர்ச்சி அடையச் செய்ய வேண்டும் எனவும், சைக்கிள் பேரணி மேற்கொண்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu