இராமநாதபுரத்தில் 4 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது

இராமநாதபுரத்தில் 4 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது
X
இராமநாதபுரத்தில், 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது, கொடைக்கான்வலசை. இந்த ஊரை சேர்ந்த கொத்தனார் ராஜேந்திரன் (வயது 29), கடந்த ஆகஸ்டு மாதம், கள்ளத்தொடர்பு காரணமாக, கிழக்கு கடற்கரை சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, ராஜேந்திரனின் அண்ணன் செல்வம் என்பவரின் மனைவி சத்யா (வயது 28) மற்றும், அவரின் கள்ளக்காதலன் ஏர்வாடி முத்தரையர் நகரைச் சேர்ந்த தர்மராஜ்(35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக தர்மராஜின் கூட்டாளியான புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருவங்காடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் மணிவாசகம் (24) மற்றும் ஏர்வாடி முத்தரையர்நகர் முருகராஜ் மகன் வசீகரன் (21) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் 4 பேர் கைதான நிலையில், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்தார். இதையேற்று, மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) காமாட்சி கணேசன் அதற்கான உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, மேற்கண்ட 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!