வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய அன்னவாசல் போலீசார்

வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு  நிவாரண உதவிகள் வழங்கிய அன்னவாசல் போலீசார்
X

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் போலீசார் கொரோனாவல் வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு நிவாரணமாக அரிசி, காய்கறி, பருப்புகளை வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம அன்னவாசலில் போலீசார் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் சரகத்திற்குட்பட்ட கிராமங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்களை கூடுதல் காவல்கண்காணிப்பாளர் ஜெரீனா பேகம் வழங்கினார்.

நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்தரசு, அன்னவாசல் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், உதவி ஆய்வாளர்கள் குணசேகரன், நாகராஜன் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் அக்பர் அலி, மீரா மொய்தீன், பர்ஷாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்