/* */

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய கட்டடம்: அமைச்சர் ரகுபதி திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி ஊராட்சியில் ரூ.85.59 லட்சம் செலவில் முடிவுற்ற பணிகளைஅமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு புதிய கட்டடம்:  அமைச்சர் ரகுபதி திறப்பு
X

 மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கட்டடத்திற்கான சாவியினை வழங்கிய சட்ட அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் லெம்பலக்குடி ஊராட்சியில் ரூ.85.59 இலட்சம் செலவில் முடிவுற்றப் பணிகளைசட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சியில், ரூ.85.59 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்றப் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (03.01.2023) திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், லெம்பலக்குடி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.71.51 இலட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கட்டடத்திற்கான சாவியினை வழங்கினார்.

மேலும் லெம்பலக்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.14.08 இலட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கு கட்டடம் என மொத்தம் ரூ.85.59 இலட்சம் செலவில் 2 முடிவுற்றப் பணிகளை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் பெண்கள் அனைவரும் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் கடனுதவிகளை வழங்கி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 42,081 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 2,548.04 கோடி ரூபாய் வங்கி கடன் இணைப்பு மற்றும் இதர பயன்கள் வழங்கப்படுகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.94.88 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, கிராமங்களை நோக்கியும், அங்கு வாழும் மக்களை நோக்கியும் செயல்படும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் அரசு விளங்கி வருகிறது.

எனவே கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு, தங்களது பொருளாதார நிலையினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ள முடிவுற்ற புதிய கட்டடங்களை இப்பகுதி கிராம பொதுமக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதாசிவம், சங்கர், வட்டாட்சியர் பிரவீணா மேரி, ஊராட்சிமன்றத் தலைவர் பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;

Updated On: 3 Jan 2023 8:30 AM GMT

Related News