மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக கடனுதவி அளித்த வங்கிகளுக்கு ஆட்சியர் விருது

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக கடனுதவி  அளித்த வங்கிகளுக்கு ஆட்சியர் விருது
X

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் வங்கிக் கடன் இணைப்பு வழங்கிய சிறந்த வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்

வங்கிக் கடன் உதவிகளுக்கு காப்பீடு செய்வது, தனியார் வங்கிகளுக்கான நிதியியல் கல்வி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் வங்கிக் கடன் இணைப்பு வழங்கிய சிறந்த வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட இயக்க மேலாண் அலகு சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் வங்கிக் கடன் இணைப்பு வழங்கிய சிறந்த வங்கிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிக் கிளை மேலாளர்களுக்கும் நிதி உள்ளாக்கம் மற்றும் நிதிசார் கல்வி தொடர்பான பயிற்சியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார். இப்பயிற்சி வகுப்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கு வது குறித்தும், வங்கிகள் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்காக செயல்படுத்தி வரும் நிதித் திட்டங்கள் குறித்தும், வங்கிக் கடன் உதவிகளுக்கு காப்பீடு செய்வது குறித்தும், தனியார் வங்கிகளுக்கான நிதியியல் கல்வி குறித்தும் எடுத்துரைக்கப் பட்டது.

மேலும் இப்பயிற்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன், ஊராட்சி அளவில் கூட்டமைப்பிற்கான பெருங்கடன் வட்டி மானியம், சமுதாய அளவிலான கடன் மீட்பு அமைப்பு கடனை திருப்பிச் செலுத்துதல் மற்றும் வாராக் கடன் குறைப்பதற்கான உத்திகள் மேற்கொள்ளுதல், மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களை கொண்டு வங்கி முகவர்கள் மற்றும் பிரதம மந்திரி விபத்து காப்பீடுத் திட்டம், இயற்கை மரண காப்பீடு போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

அதன்படி, புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையின் சார்பில் 1,259 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.52.94 கோடி மதிப்பீட்டிலும், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதுக்கோட்டை கிளையின் சார்பில் 1,218 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.41.29 கோடி மதிப்பீட்டிலும், கீரனூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையின் சார்பில் 230 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13.60 கோடி மதிப்பீட்டிலும்.

கவிநாடு மேலவட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் 89 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.4.68 கோடி மதிப்பீட்டிலும், புதுக்கோட்டை கனரா வங்கிக் கிளையின் சார்பில் 93 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3.99 கோடி மதிப்பீட்டிலும் வங்கி இணைப்பு கடன் உதவிகளை சிறப்பாக வழங்கியதைத் தொடர்ந்து, மேற்காணும் வங்கி மேலாளர்களுக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!