தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக மண் வள நாள் உறுதி ஏற்பு

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக மண் வள நாள் உறுதி ஏற்பு
X

கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக மண்வள பாதுகாப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

மண்ணின் அரிப்பைக் குறைக்கவும், வளத்தை பராமரிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும் மண்வளம் மிக முக்கியமானது.

கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலக மண்வள பாதுகாப்பு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், மஞ்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய வட்டாரத் தலைவர் அ.ரகமதுல்லா பங்கேற்று உலக மண்வள தினம் உலக மண்வள தினம் குறித்து பேசியதாவது:

உலக மண் தினம் டிசம்பர் 05 -ல் கடைபிடிக்கப்படுகிறது. பூமியில் மண்ணின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்கள் தொகை விரிவாக்கம் காரணமாக வளர்ந்து வரும் பிரச்னையை முன்னிலைப்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதி உலக மண் தினம் அனுசரிக்கப்படுகிறது.

மண்ணின் அரிப்பைக் குறைக்கவும், வளத்தை பராமரிக்கவும், உணவுப் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் மண்வளம் மிக முக்கியமானது.மண் தாதுக்கள், கரிமப் பொருட்கள் மற்றும் காற்று ஆகியவற்றால் வெவ்வேறு விகிதாச்சாரத்தில் ஆனது.

இது ஒரு தாவரத்தின் வளர்ச்சிக்கான ஊடகம், பல பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களுக்கான வாழ்விடத்தை வழங்குகிறது என்பதால் இது வாழ்க்கைக்கு முக்கியமானது. இது மேற்பரப்பு நீருக்கான வடிகட்டுதல் அமைப்பாகவும் வளிமண்டல வாயுக்களின் பராமரிப்பிலும் செயல்படுகிறது. உணவு, உடைகள், தங்குமிடம் மற்றும் மருந்து உள்ளிட்ட நான்கு அத்தியாவசிய ‘வாழ்க்கை’ காரணிகளின் ஆதாரமாக இது உள்ளது. எனவே, மண்ணின் பாதுகாப்பு அவசியம். எனவே, மண் இழப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது.

2002 ஆம் ஆண்டில், சர்வதேச மண் அறிவியல் ஒன்றியம் உலக மண் தினத்தை ஆண்டுதோறும் டிசம்பர் 5 அன்று கொண்டாட பரிந்துரைத்தது. அதன் அடிப்படையிலேயே கொண்டாடப்பட்டு வருகிறது என்றார் மாணவர்கள் மண்வளம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இதை முன்னிட்டு மாணவர்கள் மண்வளம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்..

இந்நிகழ்வில் தற்காலிக ஆசிரியர்கள் புவனேஸ்வரி உமா இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் நிரோஷா, லோகாம்பாள், கிருத்திகா, பானுப்பிரியா, ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil