குண்டடிபட்டு இறந்த சிறுவன் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் நிதி உதவி
பசுமலைப்பட்டியில் குண்டடிபட்டு இறநத சிறுவன் புகழேந்தியின் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பர்வேஷ்.
குண்டடிபட்டு இறந்த சிறுவன் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் பர்வேஷ்.
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைய தளத்திலிருந்து எதிர்பாராதவிதமாக துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தனது தாத்தா வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் புகழேந்தி தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் பலத்த காயத்துடன் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் புகழேந்தி உயிரிழந்தான். இந்த நிலையில் சிறுவனுடைய உறவினர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் குண்டடிப்பட்டு இருந்த சிறுவன் புகழேந்தியின் இழப்பிற்கு உரிய நிவாரணம் மற்றும் பயிற்சி தளத்தை மூட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனார்.
இந்த நிலையில் தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் நிதி உதவியும் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தையும் மூடுவதற்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் நேர்காணலில் புதுக்கோட்டை பசுமலைப் பட்டியில் துப்பாக்கி சூட்டில் இறந்த சிறுவன் புகழேந்தியை பற்றி நேர்காணலில் நடிகர் விஜய் பேசி இருந்தார்.
இதனையடுத்து இன்று புதுக்கோட்டை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவரும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளரும் 4வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பர்வேஷ் குண்டடி பட்டு இறந்த புகழேந்தியின் குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கி அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் புகழேந்தியின் தங்கை படிப்புச் செலவிற்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாகவும் அந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu