தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி விற்பனை வண்டி: எம்எல்ஏ வழங்கல்

கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட 20 பேருக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை முயற்சியில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது

தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில், கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட 20 பேருக்கு காய்கறி விற்பனை வண்டியை, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை வழங்கினார்.

தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 50 விழுக்காடு அரசு உதவியுடனும் 50 விழுகாடு விவசாயிகள் பங்கேற்புடனும் காய்கறி விற்பனை வண்டி வழங்கப்படுகிறது. இத்தகைய வண்டி புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தொகுதிக்கு உட்பட்ட 20 பேருக்கு, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை முயற்சியில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 8 பேர், கறம்பக்குடி ஒன்றியத்தில் 7 பேர், குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் 5 பேர் என 20 பேருக்கு, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை காய்கறி விற்பனை வண்டியை வழங்கினார். இந்நிகழ்வில் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் சத்யா, காளீஸ்வரன், நர்மதா டயானா, ஒன்றியக் கவுன்சிலர் ராஜேந்திரன், திமுக நகரச் செயலாளர் ராஜா, சிபிஎம் ஒன்றியச் செயலளார் வி.ரெத்தினவேல் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
future of ai in retail