இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
X
புதுக்கோட்டை, கீரனூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்றிரவு பைக் - ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பைக்கில் வந்த இளைஞர்கள் ஆரோக்கிய ஜுடு, மற்றும் முதியவர் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆரோக்கிய ஜுடு

மேலும் டிவிஎஸ் ஸ்கூட்டர்யில் வந்த பெண் ஒருவர், அமர்நாத் என்பவர் உள்பட இருவர், படுகாயமடைந்து கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களும் அதிவேகமாக வந்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது என தெரிகிறது இது குறித்து கீரனூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!