சுகாதாரம்- ஊட்டச்சத்து.. ஆசிரியர்களுக்கு பயிற்சி

சுகாதாரம்- ஊட்டச்சத்து.. ஆசிரியர்களுக்கு பயிற்சி
X

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் குடிநீர், தன்சுத்தம், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

குடிநீர் மற்றும் அதனை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகளும் குடிநீரினால் பரவக்கூடிய நோய்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் குடிநீர், தன்சுத்தம், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வள மையத்தில் கிராமலயா நிறுவனத்தின் மூலம், பேங்க் ஆப் அமெரிக்கா நிதியுதவியுடன் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி ஒன்றியங்களைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியைகளுக்கு குடிநீர், தன்சுத்தம், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி நடைபெறுகிறது.

இப்பயிற்சினை இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கிராமாலயா நிறுவனத்தின் மாதவிடாய் சுகாதார இயக்குநர் பீரித்தி தாமோதரன், சமூகப் பொறுப்பு நிதி இயக்குனர் கீதா ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியளித்தனர்

பயிற்சியின் சாரம்சம்.. குடிநீர் மற்றும் அதனை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகளும் குடிநீரினால் பரவக்கூடிய நோய்கள் குறித்தும், அதை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் திறந்தவெளியில் மலம் கழிப்பதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும், எல்லோரும் சுகாதாரமான கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் 44% முறையான கை கழுவுதல் இல்லா காரணத்தால் ஏற்படுகிறது என்றும், வயிற்றுப்போக்கினால் இறக்கக்கூடிய குழந்தைகளுக்களில் 51% பேர் முறையான கை கழுவுதல் இல்லாத பழக்கத்தி னாலேயே இறப்பு ஏற்படுகிறது என்று கூறப்பட்டது. மாதவிடாய் சுகாதார மேலாண்மையில் பெண்கள் பூப்படைந்த நாள் முதல் பின்பற்ற வேண்டிய அனைத்து சுகாதார முறைகள் குறித்தும்.

ஊட்டச்சத்து அதன் பற்றாக்குறையினால் குழந்தைகளுக்கு வயதிற்கேற்ற உயரம் மின்மையும், உயரத்திற்கேற்ற எடையின்மையும், உடல் பருமனும் ஊட்டச்சத்து குறைபாடினால் ஏற்படுகிறது. அந்தந்த காலங்களில் அந்தந்த பருவத்திற்கு விளையும் காய்கறிகளையும் பழங்களையும் எடுத்துக் கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைப்பாட்டை தவிர்க்கலாம் என்றும், துரித உணவுகளையும் கார்பனேட்டடு குளிர்பானங்களையும் தவிர்க்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர் பெருமக்களும் தங்களுடைய பள்ளிகளில் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பாசிரியர் அறிவழகன், கிராமாலயா நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், உமா மகேஸ்வரன், மரியா, பார்வதி,சத்யா மற்றும் மரகதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு