நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சோகம்

நீரில் மூழ்கி இரண்டு  சிறுவர்கள் உயிரிழந்த சோகம்
X

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த சொக்கம் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆறு குழந்தைகள், ஒன்று சேர்ந்து குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பொழுது,

விக்னேஷ் வயது 8, நிவேதா வயது 10 ஆகிய இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கியுள்ளனர். ஒருவரை ஒருவர் காப்பாற்ற செல்லும் பொழுது இரண்டு சிறுவர்களும் உள்ளே மூழ்கியுள்ளனர். இவர்களைப் பார்த்து மற்ற நான்கு சிறுவர்களும் அவர்களை காப்பாற்ற முயற்சித்த போது குளத்தில் மூழ்கும் தருவாயில் அவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 6 சிறுவர்களையும் குளத்தில் இருந்து மீட்டனர். அருகில் உள்ள வெள்ளாளவிடுதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர்.

அதில் இறந்து போன இரண்டு சிறுவர்களையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குளிக்கச்சென்ற குழந்தைகள் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த குழந்தையின் உறவினர்கள் மற்றும் சிறுவர்களின் தாய் மருத்துவமனையில் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!