இல்லம் தேடிக்கல்வி மையத்தில் கோடை கால புத்தக வாசிப்பு முகாம்
கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கோடை புத்தக வாசிப்பு முகாம் தொடங்கியது.
கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கோடை புத்தக வாசிப்பு முகாம் தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கோடை புத்தகம் வாசிப்பு முகாம் கந்தர்வகோட்டை ஒன்றிய கிளை நூலகத்தில் நேற்று தொடங்கப்பட்டது.
நிகழ்விற்கு கிளை நூலகர் வனிதா தலைமை வகித்தார். வட்டார வளமைய ஆசிரியர் பயிற்சிநர்கள் சுரேஷ்குமார், பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பேசியதாவது: மாணவர்களுக்கு கோடை காலத்தில் விடுமுறையை பயனுள்ள வகையில் மாற்றக்கூடிய கோடை புத்தக வாசிப்பு கொண்டாட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையத்தில் தொடங்கப்பட்டுள் ளது.
மாணவர்கள் தங்கள் ஊரில் உள்ள நூலகங்களுக்கு மாணவர்கள் சென்று வாசிக்க வேண்டும் எனவும், கந்தர்வகோட்டை கிளை நூலகத்தில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட நூல்களும் 150 க்கும் மேற்பட்ட மாத இதழ்களும், தினசரி நாளிதழ்கள் 8 நாளிதழ்களும் வாங்கப்படுகின்றன. .
அவற்றை மாணவர்களும் தொடர்ந்து வாசித்து பயன்பெற வேண்டும். இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த மாணவர்களை அருகில் இருக்கும் நூலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். எனவும், நூலகத்தில் உள்ள புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் வாசிப்பு திறனை மேம்படுத்த வேண்டும் .கந்தர்வக்கோட்டை ஒன்றிய கிளை நூலகத்தில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் பற்றியும் அறிவியல் தத்துவம், காந்தி, நேரு சுபாஷ் சந்திர போஸ் கோபாலகிருஷ்ணன் கோகலே, அன்னிபெசன்ட் அம்மையார், காமராஜர் உள்ளிட்டோரின் வரலாற்று நூல்களும் இலக்கிய நாவல்களும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுபோல கந்தர்வகோட்டை ஒன்றிய முழுவதும் மாணவர்கள் அந்தந்த ஊராட்சிகளில் உள்ள நூலகத்தை பயன்படுத்த வேண்டும் என்றார் அவர். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிறப்பாசிரியர் அறிவழகன், தன்னார்வலர்கள் மாலினி ,சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu