அப்துல் கலாம் பிறந்த நாளை மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய மாணவர்கள்
கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையத்தில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினார்.
கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடி கல்வி மையத்தில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், அரியாணிப்பட்டி இல்லம் தேடி கல்வி மையத்தில் மாணவர்கள் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு பிறந்த நாளை கொண்டாடினர். தன்னார்வலர் ராதிகா அனைவரும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரஹமத்துல்லா டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசியதாவது
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும்.
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு எஸ்.எல.வி -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.
இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார். இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் புவனேஸ்வரி,ஹேமா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu