வெள்ளாளவிடுதியில் அறிவியல் இயக்க பள்ளிக் கிளை மாநாடு
கந்தர்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதியில் அறிவியல் இயக்க பள்ளிக் கிளை மாநாடு நடைபெற்றது.
கந்தர்வகோட்டை ஒன்றியம், வெள்ளாளவிடுதியில் அறிவியல் இயக்க பள்ளிக் கிளை மாநாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பள்ளிக்கிளை மாநாடு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் வட்டாரத் தலைவர் ரஹமதுல்லா தலைமையில் நடைபெற்றது.
கிளை மாநாட்டில் மாணவர்கள் இளநிலைப் பிரிவில் புதிய தலைவராக ராஜி, செயலாளராக கயல்விழி பொருளாளராக கதிரேசன் ஆகியோரும் உயர்நிலைப் பிரிவில் தலைவராக அகல்யா, செயலாளராக ரித்திகா பொருளாளராக காளிதாஸ் ஆகியோரும் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கிளைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் அறிமுகப்படுத்தி வாழ்த்தி பேசியதாவது: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் துளிர் திறனறிதல் தேர்வு, வினாடி வினா, குழந்தை விஞ்ஞானிகள் மாநாடு மற்றும் அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகள் ஆகியவற்றில் மாணவர்கள் கலந்துகொள்வதன் மூலம் அன்றாட அறிவியல் செய்திகளை அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பேசினார். இம்மாநாட்டில் துளிர் விஞ்ஞான சிறகு, விஞ்ஞான துளிர், ஜந்தர் மந்தர் ஆகிய இதழ்களின் வாசிப்பு முகாம் நடைபெற்றது.
பள்ளியில் செயல்படும் அறிவியல், வானவில், சுற்றுச்சூழல் மன்றங்களோடு இணைந்து மரங்கள் நடுவது, சுற்றுச்சூழல் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வினாடி வினா நடத்துவது, அறிவியல் புத்தகங்கள் அறிமுகப்படுத் துவது போன்ற பணிகளை செய்யவுள்ளதாக புதிய மாணவ நிர்வாகிகள் தெரிவித்தனர்.மாணவி பாக்யபிருந்தா அனைவரையும் வரவேற்றார்.நிறைவாக மாணவி காவியா அனைவருக்கும் நன்றி கூறினார்.
மாணவர்கள் கிளை மாநாடு தேர்தல் ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஜஸ்டின் திரவியம், சரவணமூர்த்தி, பரிமளா, பாரதிராஜா, சக்தி மணிகண்டன் ஆகியோர் செய்து இருந்தனர்.இந்நிகழ்வில் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர் ரஷ்யா, பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu