அறந்தாங்கி ஒன்றியத்தில் ரூ.60 லட்சத்தில் வளர்ச்சிப்பணி: அமைச்சர் தொடக்கம்
புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளை தொடக்கி வைத்தசுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். உடன் ஆட்சியர் கவிதாராமு
புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ரூ.60.06 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்சிவ.வீ.மெய்யநாதன் ரூ.60.06 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலை வசதி, குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை தேவகைளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, முடிவுற்ற பணிகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட எரிச்சி மற்றும் நற்பவளகுடியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தும், செங்கமாரி ஆதிதிராவிடர் காலனியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.08 லட்சம் மதிப்பீட்டிலும், 14வது மற்றும் 15வது நிதிக்குழுவிலிருந்து ரூ.8.36 லட்சம் மதிப்பீட்டில் என ரூ.16.44 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.3.69 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் ரோடு அமைக்கும் பணிகளையும், செங்கமாரி ஊராட்சிமன்றம் அருகில் ரூ.3.72 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், போஸ் நகரில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16.52 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைப்பதற்கான பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தும், மாங்குடி, இடைவெரியேந்தலில் ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள், உயரிய தரத்துடன் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர்.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், வருவாய் கோட்டாட்சியர்; சு.சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலு, சிவகாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu