கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வானவில் மன்ற போட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் நடைபெற்றது.
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வானவில் மன்ற போட்டிகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வானவில் மன்ற போட்டிகள் நடைபெற்றது.
வானவில் மன்ற போட்டிகளில் அறிவியல் கண்காட்சி பிரிவில் சூழல் மாசுபாடு, ஒளிச்சேர்க்கை, சூரிய குடும்பம் உலக வெப்பமயமாதல் ஆரோக்கியமான வாழ்க்கை முறை எண்களின் மந்திரம் என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மாணவர்கள் ஒளிச்சேர்க்கை சுற்றுச்சூழல் பயன்பாடு எண்களின் கணிதம் உள்ளிட்ட தலைப்புகளில் காட்சிப் படுத்தினர். அறிவியல் செயல் திட்டம் தலைப்பில் புதுப்பிக் கத்தக்க ஆற்றல் புதுப்பிக்க இயலாத ஆற்றல் என்ற தலைப்பில் செயல் திட்டங்களை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
அறிவியல் நாடகம் என்ற தலைப்பில் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் இந்திய அறிவியல் அறிஞர்கள் தமிழ்நாடு அறிவியல் அறிஞர்கள் உலக அறிஞர் அறிவியல் அறிஞர்கள் என அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு மாணவர்கள் நாடகமாக நடித்து காண்பித்தனர்.
செப்டம்பர் அக்டோபர் நவம்பர் உள்ளிட்ட சிறார் திரைப் படங்களில் திரை விமர்சனம் தனிநபர் நடிப்பு , குறும் படம் தயாரித்தல் ஆகிய நிகழ்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். போட்டியினையை வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் ஒருங்கித்ணைத்தார் . போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்று நர்கள் பாரதிதாசன் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந் தனர்.
போட்டியின் நடுவர்களாக இல்லம் தேடி கல்வி மையம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா, ஆசிரியர்கள் ரவி, அலெக்சாண்டர் காளியம்மாள், மணிகண்டன், ஆனந்தராஜ், நாராயணசாமி, பாக்கியராஜ் , தவச்செல்வம், ராஜமாணிக்கம் , புவனேஸ்வரி, ஜஸ்டின் திரவியம் உள்ளிட்டோர் நடுவர்களாக பணியாற்றினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு கள் தெரிவிக்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu