கந்தர்வக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ சின்னதுரை ஆய்வு

கந்தர்வக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்   எம்எல்ஏ சின்னதுரை ஆய்வு
X
கந்தர்வக்கோட்டை தொகுதி திருமலைராயபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை எம்எல்ஏ சின்னதுரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கந்தர்வக்கோட்டை அருகே திருமலைராயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ சின்னதுரை ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் தாலுகா, திருமலைராயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நோயாளிகளின் அடிப்படை வசதிகள் குறித்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ஆய்வு மேற்கொண்டனர்.

பல்வேறு சிகிச்சை அளிக்க கூடிய வகையில் அதிநவீன சிகிச்சை கருவிகள் வழங்கப்பட்டும், நவீனப்படுத்தப்பட்டும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர். கழிப்பிட வசதிகள் குறித்தும்,கொரோனா சிகிச்சை வார்டுகளில் உள்ள நோயாளிகளின் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கை குறித்தும் ஆய்வு செய்தார்..இந்த ஆய்வில் மருத்துவர்கள் மற்றும் புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story