கீரனூரில் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதியை ஆய்வு செய்த வட்டாட்சியர்

கீரனூரில் பேரூராட்சியில்  தடை செய்யப்பட்ட பகுதியை ஆய்வு செய்த  வட்டாட்சியர்
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பகுதியில் தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார். அருகில் பேரூராட்சி செயல் அலுவலர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பகுதியை வட்டாட்சியர் ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இன்று பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் தினந்தோறும் வருகை பதிவு செய்யப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனை,அரசு அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் கிருமி நாசினி லைசால் கரைசல்,பிளீச்சிங் பவுடர் தெளித்தல், கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..

அதன்படி, கீரனூர் விஐபி நகர் கொரோனா தொற்றின் காரணமாக தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ள நிலையில் குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி மற்றும் கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்