கந்தர்வகோட்டை அருகே நோபல் பரிசு தினம் கடைப்பிடிப்பு
கந்தர்வகோட்டை அருகே நோபல் பரிசு தினம் கடைப்பிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆண்டி குளப்பம்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் நோபல் பரிசு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ஞானசேகர் அகஸ்டின் தலைமை வகித்தார். தன்னார்வலர் செல்வமணி அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா கலந்து கொண்டு நோபல் பரிசு தினம் குறித்து பேசியதாவது:
நோபல் பரிசு நாள்:பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதைக் கொண்டாடும் நோபல் பரிசு, மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக தனிநபர்களை அங்கீகரிக்கிறது.முதல் நோபல் பரிசுகள் டிசம்பர் 10, 1901 அன்று ஆல்ஃபிரட் நோபல் இறந்த ஐந்தாவது ஆண்டு நினைவு நாளில் வழங்கப்பட்டது. நோபல் ஒரு ஸ்வீடிஷ் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார், அவர் நாடகம் மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வமாக இருந்தார். அவர் டைனமைட் மற்றும் பிற உயர் வெடிமருந்துகளை கண்டுபிடித்தவர், மேலும் அவரது வாழ்நாளில் 350 க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வைத்திருந்தார்.
1895 ஆம் ஆண்டில் ஆல்ஃபிரட் நோபல் தனது உயிலை எழுதியபோது, அறிவியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவர்களை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பரிசுகள் வழங்கப்படும் என்று எழுதியிருந்தார்.அதே நேரத்தில் பொருளாதார அறிவியலில் ஒரு நினைவு பரிசு 1968 இல் சேர்க்கப்பட்டது.நோபல் கமிட்டி விருது வென்றவர்களின் பரிந்துரை மற்றும் தேர்வுக்கு மிகவும் தனித்துவமான செயல்முறையைப் பின்பற்றுகிறது.
மேரி கியூரி,,1903 இல் தனது கணவர், பியர் மற்றும் ஹென்றி பெக்கரல் ஆகியோருடன் இயற்பியல் பரிசை வென்றார், பின்னர் 1911 இல் வேதியியலில் மீண்டும் வெற்றி பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி கியூரி மற்றும் இரண்டு அறிவியல் துறைகளில் வென்ற ஒரே நபர் என்றும்,
நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்:ரவீந்திரநாத் தாகூர் இலக்கியம், சி.வி.ராமன் இயற்பியல் ,ஹர் கோவிந்த் குரானா மருத்துவம்,அன்னை தெரசா சமாதானம், சுப்ரமணியன் சந்திரசேகர் இயற்பியல் ,அமர்த்தியா சென் பொருளாதாரம், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வேதியியல் ,கைலாஷ் சத்யார்த்தி சமாதானம் ,அபிஜித் பானர்ஜி பொருளாதாரம் உள்ளிட்டோர் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறைகளில் ஆய்வு செய்து கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து எதிர்காலத்தில் நோபல் பரிசு போன்ற உயர்ந்த பரிசுகளை பெற வேண்டும் என்று பேசினார்.புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி கெளரவ விரிவுரையாளர் சசிகலா முன்னிலை வகித்தார்.இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் பிரேமா, மஞ்சுளா,கோமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu