தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகை தினம் கடைப்பிடிப்பு
கந்தர்வகோட்டை கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியும் இணைந்து தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்பட்டது .
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய பத்திரிகை தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியும் இணைந்து தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்பட்டது .
இந்நிகழ்வில் கந்தரவகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத் தலைவர் ரகமதுல்லா தலைமை வகித்து பேசியதாவது:சமூக கட்டுக்கோப்பிற்கு பத்திரிகைகள் பெரிதும் உதவுகின்றன. ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுபவை பத்திரிகைகள் ஆகும்.
அரசியல், அறிவியல்,கல்வி , வேலைவாய்ப்பு,நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு செய்திகள் பொதுமக்கள் இவற்றினால் விளையும் நன்மை குறித்து அறிவதற்கும், சிந்திக்கவும், ஆலோசிக்கவும் பத்திரிகைகள் பெரும்பங்கு ஆற்றுகின்றன .காகித வடிவிலான அச்சு பத்திரிகையிலிருந்து வானொலி, தொலைக்காட்சி என அடுத்த கட்டத்திற்கு சென்ற பத்திரிகைகள், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மின்னணு பேப்பர், டிஜிட்டல் வலைதளங்கள், மென்பொருள் செயலிகள் என நினைத்து பார்க்க முடியாத வடிவங்களை அடைந்திருக்கின்றன.
அடுத்த கட்ட நவீனமயமாக்கலில் இணையதளத்தில் பெருகி வரும் சமூக வலைதளங்களின் மூலம் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற கருத்து பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு மேடைகளாகவும் மிகப்பெரும் பரிணாம வளர்ச்சியை பத்திரிகைகள் கண்டுள்ளன என்று பேசினார். இந்நிகழ்வில், மாணவர்கள் தினந்தோறும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu