சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் கடைப்பிடிப்பு

சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் கடைப்பிடிப்பு
X

கந்தர்வகோட்டை அருகே சோழகம்பட்டி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப் பட்டது.

கந்தர்வகோட்டை அருகே சோழகம்பட்டி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை அருகே சோழகம்பட்டி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப் பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சோழம்பட்டி நடுநிலைப் பள்ளியில் சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் பாண்டிய லட்சுமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட புதுக்கோட்டை மாவட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கலையரசன் சுகாதார பாதுகாப்பு தினம் குறித்து பேசியதாவது:

மாணவர்கள் மழைக் காலங்களில் பரவக்கூடிய நோய்களான டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பற்றி விழிப்பு ணர்வுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.மாணவர்கள், பெற்றோர்கள் நோய்கள் குறித்து அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு நோய்களை ஏற்படும் போது உடனடியாக மருத்துவமனை சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச ஆரோக்கிய பயணத்தில் 2012 டிசம்பர் 12 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 12ஆம் நாளை சர்வதேச சுகாதார பாதுகாப்பு நாளாக அறிவித்தது. இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக அனைவருக்கும் ஆரோக்கியம் செயலுக்கான நேரம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

டைபாய்டு காய்ச்சல், காலரா, மஞ்சள் காமாலை, போன்ற நீர் மூலம் பரவும் நோய்கள், மலேரியா டெங்கு, டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் போன்ற பூச்சிகளாலும், விலங்குகளாலும் பரவும் நோய்கள் என்று அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். கந்தர்வகோட்டை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா தொற்றுநோய்கள்,தொற்றா நோய்கள் பற்றி பேசினார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மாடத்திமாள், மேரி நிர்மலா, டியர்லின் மெஜல்லா, ரேவதி, பிரியா, இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர்கள் திவ்யா கார்த்திகா சித்ரா மகாலட்சுமி செண்பக பிரியா, வினோதினி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகர் நன்றி கூறுகிறார்.

Tags

Next Story
டிசம்பர் இறுதி... சூரிய பெயர்ச்சி...இந்த 3 ராசிக்கும் ஜாக்பாட்தான்..!