ஆயிரக்கணக்கான மக்களுடன் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா

ஆயிரக்கணக்கான மக்களுடன் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
X

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

ஆயிரக்கணக்கான மக்களுடன் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த இரண்டு வருடமாக சிறப்பாக நடைபெறாததால் இன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கில் கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் புதுக்கோட்டை ஆலங்குடி அறந்தாங்கி திருமயம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றதால் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா களைகட்டியது.

மேலும் கோவில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த தேரினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட அதிகாரிகள் வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.

மேலும் தேர் திருவிழாவில் இளைஞர்கள் ஆட்டம் பாட்டம் மேளதாளத்துடன் பால்குடம் காவடி என ஏராளமானோர் வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டனர்.

Tags

Next Story
ai solutions for small business